இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்ன ஆயுஷ் செயலாளர் பாடம் எடுக்க தகுதியற்றவர்: விஜயகாந்த் கண்டனம்

 

இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்ன ஆயுஷ் செயலாளர் பாடம் எடுக்க தகுதியற்றவர்: விஜயகாந்த் கண்டனம்

ஆன்லைனில் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கு நடைபெற்ற யோகா பயிற்சியில் தமிழகத்தை சேர்ந்த 37 பேர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொட்டாச்சா இந்தியில் பேசியதோடு, இந்தி தெரியாதவர்கள் எல்லாம் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தப்பட்டதால் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். ஏற்கனவே தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், ஆயுஷ் அமைச்சக செயலாளர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு திமுக எம்.பி கனிமொழி, முக ஸ்டாலின், கே.எஸ் அழகிரி உள்ளிட்ட பலர் தங்களது எதிர்ப்பு குரலை எழுப்பினர்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்ன மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆங்கிலம் தெரியாது என சொன்ன செயலாளர் ராஜேஷ் பாடம் எடுக்க தகுதியற்றவர் என்றும் இனிமேல் இதேபோல நடைபெறாமல் இருக்க மத்திய அரசிடம் முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.