விஜயகாந்த் இன்று முதல் 5 நாட்களுக்கு பரப்புரை : எங்கெங்கு தெரியுமா?

 

விஜயகாந்த் இன்று முதல் 5 நாட்களுக்கு பரப்புரை : எங்கெங்கு தெரியுமா?

தேமுதிக மற்றும் அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

விஜயகாந்த் இன்று முதல் 5 நாட்களுக்கு பரப்புரை : எங்கெங்கு தெரியுமா?

அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இருந்த தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறியது. தற்போது அமமுகவும் கூட்டணி அமைத்துள்ளன தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது கும்மிடிப்பூண்டி, திருத்தணி ,ஆவடி ,வில்லிவாக்கம் ,திருவிக நகர் ,எழும்பூர் தனித்தொகுதி, விருகம்பாக்கம் ,சோழிங்கநல்லூர், பல்லாவரம் ,செய்யூர் தொகுதி, மதுராந்தகம், ஊத்தங்கரை ,பாலக்கோடு, பென்னாகரம் ,ஆரணி,மயிலம் ,திண்டிவனம், திருக்கோவிலூர் ,கள்ளக்குறிச்சி ,நாமக்கல், சேலம் ,குமாரபாளையம் உள்ளிட்ட 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் இன்று முதல் 5 நாட்களுக்கு பரப்புரை : எங்கெங்கு தெரியுமா?

உடல்நலக்குறைவு காரணமாக இந்த தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. இருப்பினும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதன் முதலில் நின்று வெற்றிபெற்ற விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் இந்தமுறை களமிறங்கியுள்ளார். இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளும் அவர் தொடர்ந்து மற்றும் திருத்தணி வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்திக்காக வாக்குசேகரிக்கிறார். பின்னர் நாளை முதல் அடுத்தடுத்த நாட்களில் சென்னை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 5 நாட்களுக்கு பரப்புரையில் ஈடுபடுகிறார்.