ஒரு முறை கொரோனா வந்த நபர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு வருவதற்கு 99.99% வாய்ப்பில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

 

ஒரு முறை கொரோனா வந்த நபர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு வருவதற்கு 99.99% வாய்ப்பில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது என்பது தவறானது, இறப்பு சதவீதத்தில் 10 சதவீதத்திற்கு உள்ளான நபர்கள் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர். மற்ற 90% பேர் இணை நோய்களால் தான் உயிரிழக்கின்றனர். ஆனால் அவர்களையும் சேர்த்துதான் கொரோனா உயிரிழப்பு பட்டியலில் வெளியிட வேண்டிய நிலை உள்ளது. ஒரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மீண்டும் அவர்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்படுவது குறித்து கண்காணிக்க மருத்துவக்கல்லூரி மருந்துவனைகளில் தனி பிரிவு அமைக்கப்படும், விரைவில் அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிடுவார்.

ஒரு முறை கொரோனா வந்த நபர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு வருவதற்கு 99.99% வாய்ப்பில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

ஒரு முறை கொரோனா வந்த நபர்களுக்கு மீண்டும் 99.99 சதவீதம் கொரோனா பாதிப்பு வருவதற்கான வாய்ப்பில்லை. நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட இணை நோய்கள் மட்டுமே வருகின்றன. அதனை கண்காணிக்கவும் கண்காணிப்பு மையங்கள் மாவட்டம்தோறும் தொடங்கப்பட உள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட படுக்கை வசதி இல்லாத சூழலில் தமிழகத்தை பொருத்வரையில் 1.29 ஆயிரம் படுக்கை வசதிகளை அமைத்து நோயாளிகளின் பாதுகாப்பை தமிழக முதல்வர் உறுதி செய்துள்ளார். சென்னையை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு தொடங்கி தற்போது 75 நாட்களுக்கு மேல் ஆவதால் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது, அதேபோல் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் அதிக அளவிலான பாதிப்பு இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. பிற பகுதிகளிலும் மெல்ல மெல்ல பாதிப்புகள் குறையும் என தெரிகிறது. தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை இல்லை, ஏற்கனவே 15 ஆயிரம் மருத்துவர்கள் செவிலியர்கள் லேப் டெக்னீசியன்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களை முதலமைச்சர் நியமித்துள்ளார். இன்னும் கூடுதலாக எவ்வளவு மருத்துவ பணியாளர்கள் வேண்டுமென்றாலும் நியமிக்க தமிழக முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.” எனக் கூறினார்.