ஓபிஎஸ் உடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு!

 

ஓபிஎஸ் உடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மறைவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் அ.வள்ளியம்மாள் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வயது முதிர்வால் கடந்த 7 ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது உடல் 8ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு முதலமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

ஓபிஎஸ் உடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு!

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒன்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது. அவரது மாமியார் மறைவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் தெரிவித்ததுடன், அன்னையாரின் ஆன்மா சந்தியடைய மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.