விஜய் மக்கள் இயக்கத்தின் யூ-டியூப் சேனல் : அதிகாரப்பூர்வ தகவல்!

 

விஜய் மக்கள் இயக்கத்தின்  யூ-டியூப் சேனல் : அதிகாரப்பூர்வ தகவல்!

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் ஒன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின்  யூ-டியூப் சேனல் : அதிகாரப்பூர்வ தகவல்!

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூட்யூப் சேனல் தொடங்கவுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த சேனலில் இனி விஜய் அறிவிக்கும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்யும் நற்பணிகள் குறித்தும் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின்  யூ-டியூப் சேனல் : அதிகாரப்பூர்வ தகவல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் விஜய் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். இதை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். இதில் மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள் என முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.