விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரை நீக்க முடிவு!

 

விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரை நீக்க முடிவு!

விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக பனையூர் அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்த நிலையில் இன்று முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரை நீக்க முடிவு!

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரை நீக்கிவிட்டு அந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வ மாநில பொறுப்பாளராக பதிவு செய்ய, இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் விஜய்யின் தந்தை கட்சி ஒன்றை தொடங்கினார். இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டார். அத்துடன் தனது பெயரையோ, படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.