விஜய் கைக்குலுக்குவது தமிழக முதல்வரோடா… கலாநிதி மாறனோடா? போட்டோ உண்மையா… போட்டோஷாப்பா?

 

விஜய் கைக்குலுக்குவது தமிழக முதல்வரோடா… கலாநிதி மாறனோடா?  போட்டோ உண்மையா… போட்டோஷாப்பா?

நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால், கொரோனா பேரிடர் காலம் என்பதால் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளை நிரப்ப மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதே நிலையில் மாஸ்டர் படம் வெளியானால் வசூல் பெரியளவில் இருக்காது.

இதனை நன்கு உணர்ந்த நடிகர் விஜய், நேரிடையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளை நிரப்பிக்கொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தார். முதல்வர் தரப்பிலிருந்து உடனடியாக எந்தப் பதிலும் வர வில்லை.

விஜய் கைக்குலுக்குவது தமிழக முதல்வரோடா… கலாநிதி மாறனோடா?  போட்டோ உண்மையா… போட்டோஷாப்பா?

சில நாட்கள் கழித்து தமிழக அரசு சார்பில் 100 சதவிகித இருக்கைகளை நிரப்பிக்கொள்ள தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மதுரை நீதிமன்றமோ, ஜனவரி 11-ம் தேதி வரை தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளே நிரப்பப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில் பொங்கலுக்கு 100 சதவிகித இருக்கைகளுக்கு தமிழக அரசு அளித்த அனுமதி செயல்முறைக்கு வருமா… தடை விதிக்கப்படுமா என்ற விவாதம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் இதற்கு தடை வந்துவிடக்கூடாது என்பதால் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று பெரிய போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. அதில் ’நன்றி முதல்வரே’ என்று அச்சிடப்பட்டிருந்தது.

விஜய் கைக்குலுக்குவது தமிழக முதல்வரோடா… கலாநிதி மாறனோடா?  போட்டோ உண்மையா… போட்டோஷாப்பா?

இந்தப் போஸ்டரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் விஜய் கைக்குலுக்கும் போட்டோவும் இடம்பெற்றிருந்தது. ஆனால், நடிகர் விஜய், முதவரைச் சந்தித்தபோது போட்டோக்கள் ஏதும் வெளியிடப்பட வில்லை. அதனால், இந்தப் போட்டோ உண்மைதானா என்ற சந்தேகம் சமூக ஊடங்களில் கேள்வியாகக் கேட்க படுகிறது. மேலும், இந்த போட்டோவில் நடிகர் விஜய் அணிந்திருக்கும் உடை, கலாநிதி மாறனைச் சந்திக்கச் சென்றபோது அணிந்திருந்ததைப் போலவே இருக்கிறது.

விஜய் கைக்குலுக்குவது தமிழக முதல்வரோடா… கலாநிதி மாறனோடா?  போட்டோ உண்மையா… போட்டோஷாப்பா?

மாஸ்டர் படத்திற்கு அடுத்து சன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு ஒரு வீடியோவாக வெளியிடப்பட்டது. அதில் கலாநிதி மாறனை நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் சந்திக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதில் விஜய் அணிந்திருந்த கறுப்பு வண்ண ஆடையே முதல்வரோடு இருக்கும் போட்டோவிலும் இருப்பதால் கலாநிதி மாறனோடு கைக்குலுக்கியதை தமிழக முதல்வரோடு கைக்குலுக்கியதாக போட்டோ ஷாப் செய்யப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் சொல்லப்படுகிறது.