கொரோனாவால் எளிமையாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி

 

கொரோனாவால் எளிமையாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக விஜயதசமி தினமான இன்று மிக எளிமையாக வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜயதசமியை ஒட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம், நாகர்கோயில், குழித்துறை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் விதயாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக சமூக இடைவெளியுடன் குழந்தைகளையும் பெற்றோரையும் கோயிலுக்குள் அனுமதித்த நிலையில்,அங்கு குழந்தைகளின் விரலைப் பிடித்து நெல்லில் எழுதி, ஏடுதுவங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனாவால் எளிமையாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி

நாகர்கோவிலில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி கோயிலில்,
ஏராளமான பெற்றோர்கள் கலந்துகொண்டு, தங்கள் குழந்தைகளுக்கு ஏடு துவங்கி வைத்தனர். இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக விஜயதசமி தினத்தில் வழக்கமாக கூடுவதை விட குறைவான மக்களே கோயிலுக்கு சென்றனர்.