இந்தோனேசியாவில் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டுபிடிப்பு!

 

இந்தோனேசியாவில் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டுபிடிப்பு!

இந்தோனேசியாவில் காணாமல் போன பயணிகளின் விமான பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/breakingavnews/status/1347863350877839361

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து, ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று காலை 62 பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் ஃபோண்டியானாக் பகுதி அருகே சென்றுக்கொண்டிருக்கும்போது தரைக்கட்டுபாட்டு நிலையத்துடன் உடனான தொடர்பை இழந்தது. விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவந்தது.

இந்தோனேசியாவில் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டுபிடிப்பு!

இந்நிலையில் ஸ்ரீவிஜயா ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான அந்த போயிங் 737 ரக விமானத்தின் பாகங்கள், ஜகார்த்தா விரிகுடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோவை மீட்புக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.மேலும், ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. விபத்தில் விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.