திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட வேல்முருகன் முடிவு

 

திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட வேல்முருகன் முடிவு

திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட வேல்முருகன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016 தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் நெய்வேலி தொகுதியில் தனித்து போட்டியிட்டு 30,528 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.

திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட வேல்முருகன் முடிவு

இந்நிலையில் தற்போது திமுகவிற்கு ஆதரவளித்து வரும் வேல்முருகன், பண்ருட்டி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதன்படி, பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேல்முருகன் பாமகவில் இருந்தபோது பண்ருட்டி தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் வென்று தொடர்ந்து இருமுறை எம்.எல்.ஏ வாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.