வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் செயல்படும்!

 

வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் செயல்படும்!

வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் வேகமாக பரவி வரும் கொரோன வைரசால் இதுவரை 408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வேலூர் மாவட்டத்தில் கடைகள் இயைங்க புதிய நேரக்கட்டுப்பாடி அறிவிக்கப்படுகிறது. அதன்படி 3 நாட்கள் மட்டுமே கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே செயல்படும். இறைச்சிக் கடைகள் ஞாயிறு, புதன் ஆகிய 2 நாட்களில் மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர்சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் செயல்படும்!

புதிய நேரக்கட்டுப்பாடுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்:

  • சில்லரை வியாபாரம் செய்யும் காய்கறி, மளிகை கடைகள்- திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்கல் மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை வரை இயங்க அனுமதி.
  • துணிக்கடைகள், ஹார்டுவேர் கடைகள், இதர கடைகள், ஷோரும்கள், நகை கடைகள் ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்கள் மட்டும் காலை 6.00 முதல் மாலை 6.00 வரை இயங்க அனுமதி.
  • இறைச்சி கடைகள் ஞாயிறு மற்றும் புதன் மட்டும் காலை 6.00 முதல் மாலை 6.00 வரை இயங்க அனுமதி.
  • மொத்த வியாபாரம் செய்யும் மளிகை, பருப்பு, அரிசி, நவதானியம், காய்கறி கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்கள் மட்டும் இரவு 10.00 முதல் காலை 6.00 மணிவரை மட்டும் செயல்படும்.
  • ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்கள் மட்டும் காலை 6.00 முதல் மாலை 6.00 மணிவரை செயல்படும் அதுவும் பர்சல்கள் மட்டுமே வழங்கப்படும்.
  • மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள், உழவர் சந்தைகள் வழக்கம் போல் தினசரி செயல்படும்.
  • வாரச்சந்தைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்கள் மட்டும் காலை 6.00 முதல் மாலை 6.00 மணிவரை செயல்படும்.
  • வேலூர் சாரதி மாளிகை வணிக வளாகம் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்கள் மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை இயங்கும்