பக்தர்கள் இன்றி பாதிரியார்கள் மட்டுமே பங்கேற்ற வேளாங்கன்னி தேர்த்திருவிழா

பக்தர்கள் இன்றி பாதிரியார்கள் மட்டுமே பங்கேற்ற வேளாங்கன்னி தேர்த்திருவிழா

வேளாங்கன்னி பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய சப்பரபவனி எனப்படும் தேர்த்திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

பக்தர்கள் இன்றி பாதிரியார்கள் மட்டுமே பங்கேற்ற வேளாங்கன்னி தேர்த்திருவிழா

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம், கீழத்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்ட்- 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. விழாவின முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி எனப்படும், தேர்த்திருவிழா நடைபெற்றது .

பக்தர்கள் இன்றி பாதிரியார்கள் மட்டுமே பங்கேற்ற வேளாங்கன்னி தேர்த்திருவிழா

முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ்அம்ரோஸ் தலைமையில் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, கூட்டுபிராத்தனை உள்ளிட்டவை நடைபெற்றது. தேர் புனிதம் செய்யப்பட்டு தேர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமாக வலம் வரும் கடற்கரைசாலை, ஆரியநாட்டுதெரு, உத்திரியமாதா தெரு உள்ளிட்ட வீதிகளை தவிர்த்து, ஆலயத்தினை மட்டுமே மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல்சம்மனசு, சூசையப்பர், ஆரோக்கிய மாதா ஆகிய திருவுருவ சொரூ பங்கள் வலம் வந்தது.

பக்தர்கள் இன்றி பாதிரியார்கள் மட்டுமே பங்கேற்ற வேளாங்கன்னி தேர்த்திருவிழா

ஆண்டுதோறும் 7 தேர் சொரூபங்கள் செல்லும். ஆனால் இந்த ஆண்டு கொரானா ஊரடங்கால் மூன்று சொரூபங்கள் மட்டுமே சென்றது. மேலும்
இவ்விழாவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடுமுழுவதும் இருந்து வருகை புரிவார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி பாதிரியார்கள் மட்டுமே கலந்துகொண்டு விழா எளிமையாக நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான நாளை திரு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.