லஞ்சம் பெற்று வாகனம் விடுவிப்பு… சேலத்தில் 2 எஸ்.எஸ்.ஐ-கள் உள்பட மூவர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

 

லஞ்சம் பெற்று வாகனம் விடுவிப்பு… சேலத்தில் 2 எஸ்.எஸ்.ஐ-கள் உள்பட மூவர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

சேலம்

சோதனையில் பிடிபட்ட இருசக்கர வாகனத்தை ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு விடுவித்த சேலம் மாவட்டம் கெங்கவல்லி காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ-கள் இருவர், தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி காவல் நியைத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பணிபுரிபவர்கள் செல்வராஜ், குமார். இவர்கள் தலைமை காவலர் ராஜ்மோகனுடன் சேர்ந்து கடந்த 9ஆம் தேதி ஒதியத்தூர் பகுதயில் மதுவிற்பனை தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் சோதனைக்கு சென்றனர்.

லஞ்சம் பெற்று வாகனம் விடுவிப்பு… சேலத்தில் 2 எஸ்.எஸ்.ஐ-கள் உள்பட மூவர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் மதுவிற்பனை செய்த உமா என்பரை பிடித்த போலீசார், அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அப்போது, உமாவிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பிடிபட்ட வாகனத்தை வழக்கில் சேர்க்காமல் விடுவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சேலம் மாவட்ட எஸ்.பி., ஶ்ரீஅபிநவ்-க்கு புகார் சென்ற நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ், குமார் மற்றும் தலைமை காவலரிடம் விசராணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு வாகனத்தை விடுவித்தது உறுதியானது. இதனை அடுத்து, மூவரையும் சேலம் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., ஶ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.