விசிக நிர்வாகியின் அடாவடி ; கடுப்பான திருமா

 

விசிக நிர்வாகியின் அடாவடி ; கடுப்பான திருமா

திட்டக்குடி தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த விசிக நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார்.

விசிக நிர்வாகியின் அடாவடி ; கடுப்பான திருமா

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திட்டக்குடி தொகுதியில் கடந்த 2016ல் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணேசன் , அதிமுக வேட்பாளர் பெ.அய்யாசாமியை 2212 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதேபோல் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிகவை சேர்ந்த தமிழழகன் , விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிந்தனை செல்வனை காட்டிலும் அதிக வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடினார். இதனால் காரணமாக தான் 2016 திமுக போட்டியிட்டு வெற்றிபெற்றது.

விசிக நிர்வாகியின் அடாவடி ; கடுப்பான திருமா

இந்நிலையில் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் திட்டக்குடி தொகுதியை விசிக எதிர்பார்த்த நிலையில் அதை திமுக தன்வசப்படுத்தி கொண்டது. திமுக சார்பில் சி.வி. கணேசன் , பாஜக சார்பில் டி. பெரியசாமி , நாம் தமிழர் கட்சி சார்பாக காமாட்சி , மக்கள் நீதிமய்யம் சார்பாக பிரபாகரன் மற்றும் தேமுதிக சார்பாக உமாநாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

விசிக நிர்வாகியின் அடாவடி ; கடுப்பான திருமா

இந்த சூழலில் திட்டக்குடி தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த விசிக நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார். திட்டக்குடி தொகுதி விசிகவுக்கு ஒதுக்கப்படாத நிலையில் , விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் திருமாறன் சுயேட்சையாக வேட்புமனு தந்ததால் ந கட்சியில் இருந்து நீக்கி திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.