Home அரசியல் நான் அசோக் கெலாட் அரசை காப்பாற்ற முயற்சி செய்தேனா?.. மவுனத்தை கலைத்த பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜே...

நான் அசோக் கெலாட் அரசை காப்பாற்ற முயற்சி செய்தேனா?.. மவுனத்தை கலைத்த பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜே…

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையிலான மோதலால் ராஜஸ்தான் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அசோக் கெலாட் தனது அரசு கவிழ்க்க பா.ஜ.க.வுடன் இணைந்து சச்சின் பைலட் சதி செய்தார் என குற்றச்சாட்டியுள்ளார். மேலும் பா.ஜ.க. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது எனவும் குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பரப்பான அரசியல் மாற்றங்கள் குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்

மேலும், பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சியின் எம்.பி. ஹனுமான் பெனிவால், பெரும்பான்மையை இழந்த அசோக் கெலாட் அரசை காப்பாற்ற முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது முயற்சியை செய்து செய்கிறார். இது தொடர்பாக பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அவர் அழைத்து பேசியுள்ளார் என வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இதற்கு வசுந்தரா ராஜே எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் நேற்று வசுந்தரா ராஜே தனது மவுனத்தை கலைத்தார். வசுந்தரா ராஜே தனது கருத்துக்களை டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில் தெரிவித்துள்ளார்.

ஹனுமான் பெனிவால்

அவர் டிவிட்டரில், காங்கிரசின் உள்கட்சி சண்டைகளுக்கு ராஜஸ்தான் மக்கள் விலை கொடுப்பது துரதிருஷ்டவசமானது. கோவிட்-19ஆல் 500க்கும் மேற்பட்டவர்கள் பலியான நேரத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கி விட்டது. விவசாயிகளின் நிலத்தை வெட்டுக்கிளிகள் தாக்குகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.மாநிலம் முழுவதும் மின்சார பிரச்சினை உள்ளது. நம் மக்கள் எதிர்கொள்ளும் ஒரு சில பிரச்சினைகளை மட்டுமே நான் சொல்கிறேன். பா.ஜ.க. மற்றும் பா.ஜ.க. தலைவர்களின் பெயர்களை சேற்று வழியாக இழுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நமது மக்களின் நலன்தான் மிக முக்கியமாக இருக்க வேண்டும். மக்களை பற்றி சிந்தியுங்க என பதிவு செய்து செய்தார்.

பா.ஜ.க.

மற்றொரு டிவிட்டில், ராஜஸ்தானின் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து எந்த உண்மையும் இல்லாமல் சிலர் தொடர்ந்து குழப்பத்தை பரப்ப முயற்சிக்கின்றனர். நான் கடந்த 3 தசாப்தங்களாக கட்சியின் விசுவாசமான பணியாளராக மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். கட்சி மற்றும் அதன் சித்தாந்தத்துடன் நிற்கிறேன் என பதிவு செய்து இருந்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கோவை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கோவை கோவை அருகே குழந்தை இறந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சிங்கையன்புதூர் பகுதியை...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடம்! அசத்தும் இந்திய அணி!

அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட...

ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணம் கடத்தல்!

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், அன்பளிப்புகள், பணம் உள்ளிட்டவைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று வழங்குவதற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், ஐடிஐ மாணவர்கள் இருவர் பலி!

தஞ்சாவூர் திருவையாறு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஐடிஐ மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு...
TopTamilNews