“கோட்டு போட்டு கோட்டைக்கு போன வியாபாரி வசந்தகுமார் “- தொழிலாளர்கள் கண்ணீர்

 

“கோட்டு போட்டு கோட்டைக்கு போன வியாபாரி வசந்தகுமார் “- தொழிலாளர்கள் கண்ணீர்

முதன் முதலாக கோட் சூட் அணிந்து வியாபாரிகளின் தரத்தை உயர்த்திய பெருமைக்கு சொந்தக்காரர் நேற்று உயிரிழந்த வசந்த் அண்ட் கோ உரிமையாளர் வசந்தகுமார்.

“கோட்டு போட்டு கோட்டைக்கு போன வியாபாரி வசந்தகுமார் “- தொழிலாளர்கள் கண்ணீர்

கொரானா நோய் தொற்றால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு ,தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்த தொழிலதிபரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த் அண்ட் கோ உரிமையாளர் வசந்தகுமார் வாழ்க்கையில் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் இந்த உயர்ந்த நிலைக்கு வந்தார்
அவர் சாதாரண சர்பத் கடையில் தன்னுடைய தொழிலை தொடங்கி இன்று இந்தியா முழுவதும் பல கிளைகள் திறந்து வியாபார உலகில் கொடி கட்டி பறக்கிறார் .
அவர் வியாபாரத்திலும் விளம்பரத்திலும் புது புது யுக்திகளை கையாண்டு இந்த நிலைக்கு உயர்ந்தார் என்றால் அது மிகையாகாது .உதாரணமாக வியாரிகள் என்றால் வெள்ளை வேஷ்டியும் ,வெள்ளை சட்டையும்தான் அணிந்திருப்பார்கள் என்ற நிலைய மாற்றி முதன் முதலாக கோட் சூட் போட்டு வியாபாரம் செய்தார் .அந்த பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆவார் .
மேலும் அவரின் கடை விளம்பரத்தில் கூட கோட் சூட் போட்டுகொண்டு நடித்து பல நிறுவனங்களின் விளம்பரங்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தார் .அவரை பார்த்து விட்டுத்தான்பிறகு வந்த பல தொழிலதிபர்கள் தங்களின் கடை விளம்பரத்தில் தாங்களே நடிக்க ஆரம்பித்தனர் .இப்படி கோட் சூட் அணிந்து வியாபாரிகளை ஒரு மேல் நாட்டு தரத்துக்கு உயர்த்திய பெருமை அவரையே சாரும் .

“கோட்டு போட்டு கோட்டைக்கு போன வியாபாரி வசந்தகுமார் “- தொழிலாளர்கள் கண்ணீர்