வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்….

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்….

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விவசாயிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா மீதான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஆகியவை மசோதாக்களை நிறைவேற்றியது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்….
விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம்

பஞ்சாபில் நேற்று விவசாயிகள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நாளை வரை நடத்த உள்ளனர். இதனால் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் வேளாண் மசோதாகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது இன்று நாடு தழுவிய அளவில் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்….
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு பாரதி கிசான் சங்கம் உள்பட மொத்தம் 31 விவசாய குழுக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிரோன்மணி அகாலி தளம், ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி உள்பட மொத்தம் 19 கட்சிகள் விவசாயிகளின் இன்று மேற்கொள்ளும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளித்துள்ளன.