வழித்துணையாய் வருவாள் வாராஹி!

 

வழித்துணையாய் வருவாள்  வாராஹி!

கலியுகத்தில் மனிதர்களின் துன்பத்திற்கு காரணமான கர்ம வினையை போக்கி நல் வாழ்வு தரும் கருணைக்கடல் அன்னை வாராஹி.. அவள் பாதங்களை இறுக பற்றிக்கொண்டு அவளே சரணாகதி எனறு நம்புவோரை கைவிடுவதில்லை அன்னை. நம் வாழ்க்கை பயணத்தில் வழித்துணையாய் அன்னை வாராஹி வருவாள். வளம் பல தருபவள்.” அன்னை வாராஹி ” மட்டுமே.

வழித்துணையாய் வருவாள்  வாராஹி!

வாழ்வளிக்கும் இந்த தேவி, சப்த மாதர்களில் ஒருத்தி. சப்த மாதர்களின் மகிமையை தேவி மஹாத்மியம் முதலான ஞான நூல்கள் விரிவாக விளக்குகின்றன. மார்க்கண்டேய புராணத்தில் அமைந்திருக்கிறது தேவிமஹாத்மியம். 700 மந்திரங்களைக் கொண்டதால் ‘சப்த ஸதீ’ என்று போற்றப்படுகிறது. இந்த நூல், அசுரர்களாகிய சும்ப- நிசும்பர்களை அழிக்க ஆதி சக்திக்கு உதவியாக அவதரித்தவர்கள் சப்தமாதர்கள் என்று விவரிக்கிறது. இவர்களில் வாராஹி தேவியை வழிபட, எதிரி பயம் நீங்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். விவசாயம் செழிக்கவும் இவளை வழிபடுவார்கள்.
மிகுந்த துயரத்துடன் நாம் மேற்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை பயணம் சுகமாக அமைய வழித்துணை யார் என்று புலம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு நானிருக்கேன் என்று கை கொடுப்பவள் அன்னை வாராஹி மட்டுமே. முற்பிறவியிலோ அல்லது எந்த பிறவியிலோ நாம் செய்த பாவங்களே கர்மவினையாக மாறி நம்மை அலைகழிக்கிறது என்கிற உண்மை உணர்த்தப்பட்ட பின்னும் அதற்காக சிறு பூஜைகள், பரிகாரங்கள் என செய்தும் பார்த்து விட்டோம். நாம் செய்த பாவங்கள் நம் சந்நதிகளை பின் தொடராமலும், நம்மையும் மறுபிறவி என்கிற சுழலில் சிக்க வைக்காமல் இருக்க நம்மை காப்பாற்ற போவது யார் என்கிற அனைத்துக்கும் ஒரே விடை. அகிலாண்ட கோடி, பிரமாண்ட நாயகியான அன்னை வாராஹி மட்டுமே.

வழித்துணையாய் வருவாள்  வாராஹி!

இனி வாழ்க்கையே இல்லை என்று வந்தவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் வழித்துணையாய் வாராஹி இருப்பாள் என்ற நம்பிக்கையை உண்டாக்கக் கூடியவள். தீராத நோய்கள் எல்லாம் தீர்த்து வைப்பவள். ஒரு முறை, அன்னை வாராஹியின் பாதத்தை பற்றிக்கொண்டால் என்ன நடக்கிறது என்பதை நேரில் தெரிந்து கொள்ளலாம்.

இதுவரை இல்லையென்றாலும் இனி நடக்கும் என்ற நம்பிக்கையுடனும் , தூய பக்தியுடனும் வணங்கினால் மாற்றம் என்ன என்பதை நீங்களே உணரலாம். தன்னை நம்பி வந்த பக்தர்களின் துயர் துடைக்க அவர்களை பரிவுடன் உற்று நோக்குவாள். அந்த ஒரு கணத்தில் ஏழேழ் பிறவியிலும் நாம் செய்த பாவங்கள் நீங்கி நமது கர்மவினைகள் அகன்று நல்லதொரு வாழ்வு கிட்டும்.
வாராஹியை வணங்குங்கள். வாழ்க்கை முழுவதும் வழித்துணையாய் வருவாள்.
அன்னையின் அருளை பெறுங்கள்.
” ஓம் நமோ வாராஹி “

வழித்துணையாய் வருவாள்  வாராஹி!
  • வித்யா ராஜா