பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது!

 

பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே பட்டா மாற்றம் செய்ய விவசாயிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பாண்டுரெங்கன் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். விவசாயி. இவர் தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்வதற்காக அஞ்செட்டி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது!

அப்போது, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் என்பவர் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பட்டாவை மாறுதல் செய்வதாக தெரிவித்து உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பாக்கியராஜ் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து, அவர்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில் நேற்று ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் பணத்தை பாக்கியராஜ், விஏஓ கார்த்திக்கிடம் வழங்கினார்.

அப்போது, விஏஓ அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விஏஓ கார்த்திக்கை கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச புகாரில் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அஞ்செட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.