“வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க முடியாது”

 

“வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க முடியாது”

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை ஆளும் அதிமுக அரசு நிறைவேற்றி வைத்தது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டம் தற்காலிகமானது தான் என அறிவித்த முதல்வர் பழனிசாமி, 6 மாதத்திற்கு பிறகு சாதி வாரி கணக்கெடுப்புகள் கிடைத்த பிறகு மாற்றியமைக்கப்படும் என அறிவித்தார். இதற்கு ஆளுநர் பன்வாரிலாலும் ஒப்புதல் வழங்கிவிட்டார்.

“வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க முடியாது”

இந்த 10.5% இட ஒதுக்கீடு பிற சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. இச்சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி திண்டுக்கல்லை சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

“வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க முடியாது”

அவர் அளித்திருந்த மனுவில், அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும் 0.5 % வன்னியர்களுக்கு கொடுத்தால் மற்ற சாதியினருக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வன்னியர்களுக்கான 10.5% சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், விஜயகுமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.