வாணியம்பாடியில் அடுத்தடுத்து நிரம்பிய 3 ஏரிகள்- உபரிநீரை மலர்தூவி வரவேற்ற விவசாயிகள்

வாணியம்பாடியில் அடுத்தடுத்து நிரம்பிய 3 ஏரிகள்- உபரிநீரை மலர்தூவி வரவேற்ற விவசாயிகள்

திருப்பத்தூர்

தொடர் மழையின் காரணமாக வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், ஏரியில் வழிந்து ஓடும் நீருக்கு கற்பூரம் ஏற்றி, மலர் தூவி வரவேற்றனர்.

வாணியம்பாடியில் அடுத்தடுத்து நிரம்பிய 3 ஏரிகள்- உபரிநீரை மலர்தூவி வரவேற்ற விவசாயிகள்

திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால், 4 ஆண்டுகளுக்கு பின் வளையம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட உப்பு கானாறு ஏரி நிரம்பியது. இதனால் அந்த ஏரியில் இருந்து நீர்வரத்து பெறும் லாலா ஏரி மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள துளசிபாய் ஏரியும் நிரம்பியுள்ளது.

வாணியம்பாடியில் அடுத்தடுத்து நிரம்பிய 3 ஏரிகள்- உபரிநீரை மலர்தூவி வரவேற்ற விவசாயிகள்

இதன் மூலம் லாலா ஏரி, வளையம்பட்டு, கிரிசமுத்திரம், மாராப்பட்டு உள்ளிட்ட பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். துளசிபாய் ஏரி நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்துள்ள அந்தபகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், ஏரியில் இருந்து வழிந்தோடும் உபரிநீருக்கு கற்பூரம் ஏற்றியும், மலர்களை தூவியும் வரவேற்றனர்.