வந்தே பாரத் திட்டம்: மதுரை விமான நிலையத்தில் 11 விமானங்கள் தரையிறக்கப்படும்!

வந்தே பாரத் திட்டம்: மதுரை விமான நிலையத்தில் 11 விமானங்கள் தரையிறக்கப்படும்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாவட்டங்களில் தொற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

வந்தே பாரத் திட்டம்: மதுரை விமான நிலையத்தில் 11 விமானங்கள் தரையிறக்கப்படும்!

இதனிடையே கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.

வந்தே பாரத் திட்டம்: மதுரை விமான நிலையத்தில் 11 விமானங்கள் தரையிறக்கப்படும்!

இந்நிலையில் வந்தேபாரத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்தில் மதுரை விமான நிலையத்தில் 11 விமானங்கள் தரையிறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஐக்கிய அரபு அமீரகம், துபாய், சிங்கப்பூர், நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் மதுரையில் தரையிறக்கவுள்ளன.