கோவை தெற்கில் வெற்றி… சந்தோஷத்தில் வானதி சீனிவாசன் போட்ட ட்வீட்!

 

கோவை தெற்கில் வெற்றி… சந்தோஷத்தில் வானதி சீனிவாசன் போட்ட ட்வீட்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்று நள்ளிரவுக்குள் முடிவுகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. எனினும் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடியாததால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கோவை தெற்கில் வெற்றி… சந்தோஷத்தில் வானதி சீனிவாசன் போட்ட ட்வீட்!

இந்த தேர்தலில் 5 முனை போட்டி என்றாலும் அதிமுக – திமுக இடையேதான் நேரடி போட்டி நிலவியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் மக்கள் நீதி மய்யம் கட்சி முன்னிலை வகித்தது. கோவை தெற்கில் போட்டியிட்ட கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் இருந்தனர்.

கோவை தெற்கில் வெற்றி… சந்தோஷத்தில் வானதி சீனிவாசன் போட்ட ட்வீட்!

காலையிலிருந்து பிற்பகல் வரை இதே நிலைதான் நீடித்தது. ஆனால், அதன் பிறகு முடிவுகள் தலைகீழாய் மாறிப்போனது. கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளி வானதி சீனிவாசன் முன்னிலைக்கு சென்றார். இந்த நிலையில், கோவை தெற்கு வானதி சீனிவாசன் 1658 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாம் ஜெயித்து விட்டோம். வாக்களித்தவர்களுக்கும் பாஜக தலைமைக்கும் தலை வணங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் மோடி, அமித்ஷா ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.