டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்… வானதி சீனிவாசன் வேண்டுகோள்!

 

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்… வானதி சீனிவாசன் வேண்டுகோள்!

டெல்லி சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோதாவரி, காவிரி நதிநீர் இணைப்பு பற்றி பேச வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், பிரதமர் மோடி தமிழகத்திற்காக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். முதல்வராக டெல்லி சென்றிருக்கும் ஸ்டாலினின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். பாஜகவை கடுமையாக விமர்சித்த திமுக இனியாவது பிரதமரின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும். மத்திய அரசு 42 லட்சம் தடுப்பூசி வழங்கி இருக்கும் நிலையில் அரசு மக்களுக்கு விரைந்து போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்… வானதி சீனிவாசன் வேண்டுகோள்!

தொடர்ந்து பேசிய அவர், தேவைக்கு ஏற்ப மத்திய அரசு ஊசிகளை வழங்கும். தடுப்பூசிகள் வீணாகாமல் அரசு தடுக்க வேண்டும். இன்று நடக்கும் சந்திப்பில் கோதாவரி, காவிரி நதிநீர் இணைப்பு பற்றி முதல்வர் ஸ்டாலின் மோடியிடம் பேச வேண்டும். இதன் மூலமாக மத்திய அரசின் நிதி உதவியை பெற்று பிரதமரே திட்டத்தை மூன்று வருடத்தில் துவக்கி வைக்க முடியும் என்றார்.

மேலும், பாஜக சட்டபூர்வ நடவடிக்கை எதிராக இல்லை. பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டத்தைப் பயன்படுத்த கூடாது என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக பாஜக இருக்கும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.