ஆன்லைன் வகுப்பு நடப்பதால் அணில் மீது பழி போடாமல் மின்வெட்டை தவிருங்கள்- வானதி சீனிவாசன்

ஆன்லைன் வகுப்பு நடப்பதால் அணில் மீது பழி போடாமல் மின்வெட்டை தவிருங்கள்- வானதி சீனிவாசன்

கோவை கவுண்டம்பாளையத்தில் பாஜக சார்பில் 500 பேருக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரணப் பொருட்கள் மற்றும் கொரோனாவால் இறந்த 4 பேரின் குடும்பங்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.

ஆன்லைன் வகுப்பு நடப்பதால் அணில் மீது பழி போடாமல் மின்வெட்டை தவிருங்கள்- வானதி சீனிவாசன்

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “கோவையில் விசைத்தறிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால் அணில் மீது பழிபோடாமல் மின்வெட்டு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், ரிவால்டோ யானையை விடுவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.