ஓட்டுக்காக ஒரு சிலர் இந்துக்களை புண்படுத்துகின்றனர்- வானதி சீனிவாசன்

 

ஓட்டுக்காக ஒரு சிலர் இந்துக்களை புண்படுத்துகின்றனர்- வானதி சீனிவாசன்

தமிழ் கடவுள் முருகனின் புகழை போற்றும் வகையிலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் பொருட்டும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தா காலனியில் யாத்திரையை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், கர்நாடகா மாநிலம துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன், மாநில துணைதலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதிஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஓட்டுக்காக ஒரு சிலர் இந்துக்களை புண்படுத்துகின்றனர்- வானதி சீனிவாசன்

கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், “வேல்யாத்திரை போனால் , கலவரம் வரும் , மதப்பிரச்சனை வரும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். எங்கேயும் பிரச்சனை வரவில்லை மாறாக உற்சாகமே பெருகின. தமிழக சட்டமன்றத்தில் இந்த முறை பாஜக உறுப்பினர்கள் நுழைவார்கள் நான் தேசிய மகளிரணி தலைவராக இருக்கலாம் ஆனால் மாநில தலைவருக்கு உறுதி அளிக்கிறேன். பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களை கோவையில் இருந்து அனுப்புவோம் என உறுதி அளிக்கிறேன். திமுக சட்டமன்ற பெண் உறுப்பினர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினாரே, அதை கேட்க திருமாவளவன் ஏன் முன்வரவில்லை. திராவிடர் கழகம் ஒரு காலத்தில் செருப்பு மாலை, விநாயகர் சிலை உடைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் , இப்போது அந்த தைரியம் எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு உள்ளதா? நான் சவாலிடுகிறேன் அதற்குத்தான் இந்த யாத்திரை. அனைத்து சமய மக்களையும் சமமாக பார்க்க வேண்டும் அப்படித்தான் பாஜக உள்ளது . ஆனால் ஓட்டுக்காக ஒரு சிலர் இந்துக்களை புண்படுத்துகின்றனர்” எனக் கூறினார்.