‘யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த வானதி சீனிவாசன்’ ராகுல் சொன்னது நடக்குதே…!

 

‘யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த வானதி சீனிவாசன்’ ராகுல் சொன்னது நடக்குதே…!

கோவை தெற்கு தொகுதி பிரச்சாரத்துக்கு வந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வணங்கினார்.

‘யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த வானதி சீனிவாசன்’ ராகுல் சொன்னது நடக்குதே…!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது .இதனால் திமுக – அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் வேலையில் மிக ஆர்வமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்க தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். நேற்று பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல் .முருகனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் .அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.இன்னும் சில நாட்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோர் தமிழகத்துக்கு வர உள்ள நிலையில் இன்று கோவையில் தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் ஆதரித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

‘யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த வானதி சீனிவாசன்’ ராகுல் சொன்னது நடக்குதே…!

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி பிரச்சாரத்துக்கு வந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பரப்புரை மேடைக்கு வந்தார். அப்போது அவரை கண்ட பாஜக கோவை தெற்கு தொகுதி வேட்பாளரான வானதி சீனிவாசன், முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கினார்.இதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பாஜகவில் இருந்தாலோ, கூட்டணிக் கட்சியாக இருந்தாலோ நீங்கள் அவமரியாதை மட்டும்தான் சந்திகையெடுத்துக் கும்பிட்டு, கூழை கும்பிடு போட்டு, கூனிக்குறுகி தான் அவர்கள் முன் நிற்க வேண்டும். அமித் ஷா, மோடி ஆகியோரின் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்பது அங்கு நடைமுறை, உ.பி. முதல்வர், அமித் ஷா காலில் விழ கட்டாயப்படுத்தப்படுகிறார். அவர் அதை விரும்பவில்லை. இருந்தாலும் விழுந்தார். காரணம் அவர் நேர்மையற்றவர்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.இன்று அவர் காலிலேயே வானதி சீனிவாசன் விழுந்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.