வானதி சீனிவாசன் எம்எல்ஏ கைது

 

வானதி சீனிவாசன் எம்எல்ஏ கைது

மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களி வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்தி கிராம் தொகுதியில், பாஜக வேட்பாளர் சுவேந்து வெற்றி பெற்றார். இதனால் ஆத்திரமடைந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

வானதி சீனிவாசன் எம்எல்ஏ கைது

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை சந்திக்க சந்திக்க தமிழக பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசன் அங்கு சென்றார். தொண்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அம்மாநில போலீசார் அவரை கைது செய்தனர்.

ஒரு அமைதி போராட்டத்திற்கு கூட மேற்கு வங்கத்தில் அனுமதி இல்லை எனவும், எம்எல்ஏவான தனக்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் நிலை எப்படி இருக்கும் என கேள்வி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.