கொல்லிமலையில் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும் வல்வில் ஓரி விழா ரத்து!

 

கொல்லிமலையில் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும் வல்வில் ஓரி விழா ரத்து!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருந்தும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள மக்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே போல மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்ப்பதற்காக விமர்சையாக நடைபெறும் பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

கொல்லிமலையில் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும் வல்வில் ஓரி விழா ரத்து!

அந்த வகையில் தற்போது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் திருவிழாவான வல்வில் ஓரி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் நடைபெறும் இந்த விழாவின் போது சுற்றுலா விழா, மலர்க் கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை காண வெளியூர்களில் இருந்தும் ஏராளமான மக்கள் திரள்வர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் இந்த விழா ரத்து செய்யப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அறிவித்துள்ளார்.

கொல்லிமலையில் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும் வல்வில் ஓரி விழா ரத்து!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொல்லிமலையில் ஆகஸ்ட் 1,2 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த வல்வில் ஓரி விழா ரத்து செய்யப்படுவதாகவும் கொரோனா காரணமாக மலர்கண்காட்சி, கலை நிகழ்ச்சி, வில்வித்தை உள்ளிட்டவை நடக்காது என்றும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.