பொது மக்கள் மத்தியில் மதிப்பு உயர வேண்டும்! – ஈரோடு போலீசாருக்கு டி.ஐ.ஜி அறிவுரை

 

பொது மக்கள் மத்தியில் மதிப்பு உயர வேண்டும்! – ஈரோடு போலீசாருக்கு டி.ஐ.ஜி அறிவுரை

பொது மக்கள் மத்தியில் போலீசாரின் மதிப்பு உயரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஈரோடு காவல் துறையினருக்கு கோவை சரக டி.ஐ.ஜி நரேந்திரன் நாயர் அட்வைஸ் செய்துள்ளார்.

பொது மக்கள் மத்தியில் மதிப்பு உயர வேண்டும்! – ஈரோடு போலீசாருக்கு டி.ஐ.ஜி அறிவுரைஈரோடு மாவட்ட காவல் துறையினருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் போக்குவரத்துக் கழக பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் கோவை சரக டி.ஜி.ஜி கே.எஸ்.நரேந்திரன் நாயர், ஈரோடு எஸ்.பி சக்தி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு பேசினர்.

பொது மக்கள் மத்தியில் மதிப்பு உயர வேண்டும்! – ஈரோடு போலீசாருக்கு டி.ஐ.ஜி அறிவுரைகோவை சரக காவல் துறை துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் நாயர் பேசும்போது, “ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு நன்றி. கொரோனா தடுப்புப் பணி மற்றும் காவல் நிலையத்துக்கு வரும் புகார்களை போலீசார் திறம்பட கையாண்டு வருகின்றனர்.

பொது மக்கள் மத்தியில் மதிப்பு உயர வேண்டும்! – ஈரோடு போலீசாருக்கு டி.ஐ.ஜி அறிவுரை

 

போலீசார், புகார் தெரிவிக்க வரும் மக்களை நல்ல முறையில் நடத்தி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவர்கள் புகார்களைக் கனிவுடன் கேட்டு குறைகளைத் தீர்க்க வேண்டும். போலீசார், பொது மக்களிடம் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நெருக்கடியான காலத்தில் பொது மக்கள் மத்தியில் காவல் துறையின் மதிப்பு உயரும் வகையில் போலீசார் பணியாற்ற வேண்டும்” என்றார்.