‘அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ – வளர்மதி

 

‘அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ – வளர்மதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த சூழலில் , அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் கூடியிருக்கிறது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ – வளர்மதி

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்களும், பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. அதில் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி, தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வழங்கல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருக்கிறார்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கியது. அக்கூட்டத்தில் பேசிய அதிமுக இலக்கிய அணி செயலாளர் வளர்மதி, அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து, நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் வாசிக்கப்படுகின்றன.