’29 ஆண்டுகள் சிறைவாசம் போதும்’ – வைரமுத்து ட்வீட்!

 

’29 ஆண்டுகள் சிறைவாசம் போதும்’ – வைரமுத்து ட்வீட்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் எழுவரை விடுவிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஆயுள் தண்டனை கைதிகளான அந்த எழுவரை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, அதற்கு ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் கோரினார். ஆனால், கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஆளுநர் மௌனம் சாதிக்கிறார்.

’29 ஆண்டுகள் சிறைவாசம் போதும்’ – வைரமுத்து ட்வீட்!

இதையடுத்து, சிறையில் இருக்கும் பேரறிவாளன் தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணையின் போது, எழுவர் விடுதலை வழக்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் வாதிட்டார். அதை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். அதன் படி, இன்னும் ஒரு சில நாட்களுக்கு எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் குரலெழுப்பி வருகின்றனர். அந்த வகையில், தற்போது கவிஞர் வைரமுத்துவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “போதும்! 29 ஆண்டுகள் சிறைவாசம் போதும். எழுவர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது. ஆளுநரின் அதிகாரம் அறத்தை முன்னிறுத்திச் சட்டத்தை அணுகட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.