சிறிது காலம் ஒடுங்குவோம்… சிறகு கொள்வோம் – வைரமுத்து ட்வீட்!

 

சிறிது காலம் ஒடுங்குவோம்… சிறகு கொள்வோம் – வைரமுத்து ட்வீட்!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 29 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழகம் முழுவதும் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

சிறிது காலம் ஒடுங்குவோம்… சிறகு கொள்வோம் – வைரமுத்து ட்வீட்!

முழு ஊரடங்கு ஒன்றே பாதிப்பை கட்டுப்படுத்தவதற்கு தீர்வு என பலதரப்பில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, நோயாளிகளை கவனிக்க முடியாமல் தாங்கள் திணறிக் கொண்டிருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் சங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டது. முன்களப் பணியாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக ஊரடங்கை அமல்படுத்தினார் முதல்வர். ஊரடங்கு நாட்களில் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே பத்திரமாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

சிறிது காலம் ஒடுங்குவோம்… சிறகு கொள்வோம் – வைரமுத்து ட்வீட்!

இந்த நிலையில், சிறிது காலம் ஒடுங்குவோம் என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கூட்டுப்புழு தன்னொடுக்கம் கொள்வது வானளக்கும் சிறகு வாங்கி வண்ணத்துப்பூச்சியாகத்தான்; ஊரடங்கும் அப்படித்தான். சிறிது காலம் ஒடுங்குவோம்; சிறகு கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.