‘கசிந்த கண்ணோடும் கனத்த நெஞ்சோடும் கைகூப்பித் தொழுகிறேன்’ – கவிஞர் வைரமுத்து ட்வீட்!

‘கசிந்த கண்ணோடும் கனத்த நெஞ்சோடும் கைகூப்பித் தொழுகிறேன்’ – கவிஞர் வைரமுத்து ட்வீட்!

முத்துராம லிங்க தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 58 வது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும், தேவர் குருபூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தேவரின் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குருபூஜை நடைபெறும்.

‘கசிந்த கண்ணோடும் கனத்த நெஞ்சோடும் கைகூப்பித் தொழுகிறேன்’ – கவிஞர் வைரமுத்து ட்வீட்!

தேவர் ஜெயந்தியையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், தேவர் ஜெயந்தியையொட்டி அவர் பிறந்த மண்ணை கனத்த நெஞ்சோடு தொழுகிறேன் என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘கசிந்த கண்ணோடும் கனத்த நெஞ்சோடும் கைகூப்பித் தொழுகிறேன்’ – கவிஞர் வைரமுத்து ட்வீட்!

அந்த பதிவில் , “குற்றப்பரம்பரை என்று குறிவைக்கப்பட்ட கூட்டத்தைக் கொற்றப்பரம்பரை என்று முற்றும் விடுதலை பெற்றுத்தந்த வெற்றித் தலைவர் தேவர் திருமகனார். அவர் பிறந்த மண்ணைக் கசிந்த கண்ணோடும் கனத்த நெஞ்சோடும் கைகூப்பித் தொழுகிறேன். #தேவர்ஜெயந்தி” என குறிப்பிட்டுள்ளார்.