இனி தமிழ்நாட்டிற்கு பொற்காலம் தான்… வைகோ நெகிழ்ச்சி!

 

இனி தமிழ்நாட்டிற்கு பொற்காலம் தான்… வைகோ நெகிழ்ச்சி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். ஸ்டாலினுடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்துடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் ஸ்டாலினுக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் தெரிவித்திருந்தனர்.

இனி தமிழ்நாட்டிற்கு பொற்காலம் தான்… வைகோ நெகிழ்ச்சி!

முதல்வரான முதல் நாளே ஆவின் பால் விலை குறைப்பு, பேருந்துகளில் மகளிருக்கு சலுகை, புகார் மனுக்களை 100 நாட்களில் நிறைவேற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே ஏற்க காப்பீடு, கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 ஆகிய ஐந்து திட்டங்களை செயல்படுத்தினார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இனி தமிழ்நாட்டிற்கு பொற்காலம் தான்… வைகோ நெகிழ்ச்சி!

இந்த நிலையில், ஸ்டாலினின் ஆட்சி தமிழகத்திற்கு பொற்காலம் தான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த வைகோ, முதல்வராகிய சில மணி நேரத்திற்குள்ளாகவே ஐந்து திட்டங்களை ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்குள் அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இனி தமிழகத்திற்கு பொற்காலம் தான். அதற்கான அடையாளம் தான் இந்த இந்தத் திட்டங்கள் தொடக்கம் என்று கூறினார்.

மேலும், தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நிரூபிக்கும் விதமாக ஸ்டாலின் இந்த திட்டங்களை அறிவித்துள்ளார் என்றும் இனி தமிழகத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.