“விசிகவை திமுக கௌரவமாக நடத்தியுள்ளது” : கமலுக்கு வைகோ பதிலடி

 

“விசிகவை திமுக கௌரவமாக நடத்தியுள்ளது” : கமலுக்கு வைகோ பதிலடி

சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். அத்துடன் விருப்ப மனு தாக்கல் செய்த வேட்பாளர்களிடமும் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை ஒரே நாளில் விருப்ப மனு தாக்கல் செய்த வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்த நிலையில் திமுக இன்று நான்காவது நாளாக நேர்காணலை நடத்தி வருகிறது.

“விசிகவை திமுக கௌரவமாக நடத்தியுள்ளது” : கமலுக்கு வைகோ பதிலடி

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, முஸ்லிம் லீக்கிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் மதிமுக மற்றும் காங்கிரஸ் உடனான கூட்டணி இழுபறி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

“விசிகவை திமுக கௌரவமாக நடத்தியுள்ளது” : கமலுக்கு வைகோ பதிலடி

இந்நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். சென்னை தாயகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுகவுடன் கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.தொகுதி பங்கீடு விவகாரத்தில் விசிகவை திமுக கௌரவமாக நடத்தியுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பு இல்லை” என்றார்.முன்னதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன் திருமாவளவனின் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.