திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா ரத்து!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா ரத்து!

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா ரத்து!

இந்நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும், அடுத்த மாதம் 5-ந்தேதி விசாக திருவிழாவும் நடக்க இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வைகாசி விசாக விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா ரத்து!

முன்னதாக கொரோனா அச்சம் காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.