23 ஆண்டுகளுக்கு பிறகு வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் இன்றி நடைபெற்றது…

23 ஆண்டுகளுக்கு பிறகு  வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் இன்றி நடைபெற்றது…

மயிலாடுதுறை

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா 23 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் இன்றி இன்று நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. செவ்வாய் பரிகார ஸ்தலாமான இந்த கோவிலில், கடந்த 1998 ஆம் ஆண்டை தொடர்ந்து, 23 ஆண்டுகளுக்கு பின் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

23 ஆண்டுகளுக்கு பிறகு  வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் இன்றி நடைபெற்றது…

இதனையொட்டி, 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 8-வது கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை 8 மணி அளவில் வைத்தீஸ்வரன் கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்தது.

23 ஆண்டுகளுக்கு பிறகு  வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் இன்றி நடைபெற்றது…

பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இன்று காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வைத்தீஸ்வரன் கோவில் 4 ரத வீதிகளில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இநத நிகழ்ச்சியில் உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு அதிகாரி விக்ராந்த ராஜ், சென்னை உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், ஆட்சியர் லலிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.