வெப் சீரிஸில் நடிக்கிறாரா வடிவேலு?

எலி  படத்தில்  கடந்த 2015 ஆம் ஆண்டு நாயகனாக நடித்திருந்த நடிகர் வடிவேலு, அதன் பிறகு கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே சிம்புதேவன் இயக்கும், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் அவர் நடிக்க இருந்தார். இயக்குநர் ஷங்கரும் லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்க இருந்த இந்தப் படத்துக்காகப் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக வடிவேலு இந்தப் படத்தில் நடிக்காமல் இழுத்தடித்தாராம்.

வடிவேலு

இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கம் வரை செல்லவே இன்றுவரை தமிழ் சினிமாவில் தீர்க்கமுடியாத பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது வடிவேலு நடித்து பாதியில் நிற்கும் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ விவகாரம். இதனால் வடிவேலு வேறு எந்த படத்திலும் நடிக்காமலிருந்து வந்தார். இந்நிலையில் பல்வேறு சர்ச்சைக்கு பிறகு கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறன் படத்தில் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இவருடைய நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. கடந்த சில தினங்களாக வடிவேலு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார், என்றும் கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்றும் தகவல்கள் வெளியானது.

ddfd

இது தொடர்பாக நடிகர் வடிவேலு தரப்பில் அளித்த விளக்கத்தில் “பலரும் பேட்டி கேட்கும் போது “வெப் சீரிஸில் நடிப்பீர்களா” என்று கேட்கும் போது, “கண்டிப்பாக நடிப்பேன்” என்று வடிவேலு சொன்னது உண்மைதான். ஆனால் இது தொடர்பான பேச்சுவார்த்தை எதுவுமே தொடங்கப்படவில்லை. வடிவேலு கூறிய பதிலை மட்டும் வைத்துக் கொண்டு ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு கமல் நடிக்கவுள்ள ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளது உறுதி. வேறு எதுவுமே உறுதியில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

- Advertisment -

Most Popular

கொரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வருடன் மத்தியக்குழு ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்த படியாகத் தமிழகம் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய...

தேனி மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன்...

இலவச மின்சாரத்துக்கு பாதிப்பு இல்லாத மின்சார சட்டத் திருத்த மசோதா வேண்டும்! – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகத்தில் விவசாயிகள், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்சார சட்டத் திருத்த மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தா.ம.க தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக...

கொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள் சிறப்பு பிரிவு பணிக்கு செல்லுங்கள் : தமிழக டிஜிபி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன்...
Open

ttn

Close