காமெடி நடிகர்கள் சிங்கமுத்து, மனோபாலா மீது நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்!

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரது காமெடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவ்வாறு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் சமீப காலமாக படங்களில் நடிக்காமல் விளக்கியிருக்கிறார். இருப்பினும் மீம்ஸ்களின் மூலமாகவோ அல்லது சோஷியல் மீடியாக்கள் மூலமாகவோ அடிக்கடி இவரது காமெடி ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

நடிகர் வடிவேலுவின் நெருங்கிய நண்பராக இருந்தவர் காமெடி நடிகர் சிங்கமுத்து. இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் தற்போது பேசிக் கொள்வதில்லை. அதுமட்டுமில்லாமல் இரண்டு பேருக்கும் இடையே நில மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சிங்கமுத்து, மனோபாலா நடத்தி வரும் யூடியூப் சேனலில் தன்னை பற்றி தவறாக பேசியிருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் வடிவேலு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், யூ டியூபில் நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற சேனலில் சிங்கமுத்து பேட்டியளித்ததாகவும், அப்போது தன்னை பற்றி மனோபாலா சிங்கமுத்துவிடம் சில கேள்விகள் கேட்டதாகவும் அதற்கு அவர் தரக்குறைவாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவை பல நடிகர்கள் இருக்கும் SIAA லைப் மெம்பர் ஷிப் என்னும் வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிர்ந்துள்ளதாகவும் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!