18+ வயதினருக்கு தடுப்பூசி… தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு!

 

18+ வயதினருக்கு தடுப்பூசி… தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தடுப்பூசி மையங்களுக்கு செல்வதற்கு பதிலாக ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.

18+ வயதினருக்கு தடுப்பூசி… தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு!

அதன் படி, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்வதால் ஓடிபி எண் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தேதி போன்ற விவரங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படுகிறது.

18+ வயதினருக்கு தடுப்பூசி… தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டோர், www.CoWin.gov.in/home என்ற இணையதளம் அல்லது ஆரோக்கிய சேது செயலி மூலமாக தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்ணை வைத்து முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு எண்ணில் இருந்து 4 பேர் முன்பதிவு செய்ய முடியும். அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல தடுப்பூசி செலுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.