“18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்” – ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பரபரப்பு பேட்டி!

“18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்” – ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பரபரப்பு பேட்டி!

இந்தியாவே கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்து செல்கிறது. உயிரிழப்புகள் 3 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. கொரோனாவை எதிர்கொள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். இதனால் தடுப்பூசியின் தேவையை உணர்ந்து பல்வேறு மாநிலங்களும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளன.

“18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்” – ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பரபரப்பு பேட்டி!

அதன்படி தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. மே 1ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி போடப்படவுள்ளது. அதற்கான முன்பதிவு ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கியது. இதற்கு நடுவே 1.5 கோடி தடுப்பூசிக்கு அரசு ஆர்டர் கொடுத்திருந்தது. நேற்று உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பில், சனிக்கிழமை (மே 1) 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இருப்பதால் முழு ஊரடங்கு போடப்படாது என்று கூறப்பட்டது.

“18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்” – ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பரபரப்பு பேட்டி!

இச்சூழலில் மே 1ஆம் தேதி திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது சந்தேகம் தான் என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவும் தொடங்கிவிட்டது. அரசு ஆர்டர் செய்த ஒன்றரை கோடி தடுப்பூசி எப்போது வந்து சேரும் என்று தெரியவில்லை.

“18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்” – ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பரபரப்பு பேட்டி!

அதனால் அவர்களுக்கு தடுப்பூசி போடுவது சந்தேகமே. கால தாமதம் ஏற்படலாம். ஆனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த எங்களிடம் இருப்பு இருக்கிறது. அவர்களுக்கு வழக்கம் போல தடுப்பூசி செலுத்தும் பணி தொடரும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.