கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி எடுக்கலாமா? – மருத்துவர்கள் சொல்வதை கேளுங்கள்!

 

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி எடுக்கலாமா? – மருத்துவர்கள் சொல்வதை கேளுங்கள்!

கொரோனா தடுப்பூசி வந்த பிறகு பல குழப்பங்கள். அது பாதுகாப்பானதுதானா, முதலில் அதை யார் எடுப்பது, தடுப்பூசி எடுப்பதால் பக்கவிளைவுகள் வருமா என்று ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி எடுக்கலாமா? – மருத்துவர்கள் சொல்வதை கேளுங்கள்!

தற்போது கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம், கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணிகள் தற்போது எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றோ, அதே நேரத்தில் அதிக கொரோனா தொற்று உள்ள பகுதியில், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டிய முன்களப் பணியாளர் என்றால் எடுத்துக்கொள்ளலாம் என்றோ எந்த ஒரு வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. இதனால் முன்களப் பணியாளர்கள் குறிப்பாக கர்ப்பமாக உள்ள, கர்ப்பத்துக்கு முயற்சி செய்யும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்ற அச்சம் உள்ளது.

இந்த நிலையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தரப்பில் சுமன் சிங் என்ற மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரிடம் கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம். அதே போல் குழந்தைப் பேற்றுக்கு முயற்சி செய்யும் பெண்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இரண்டு மாதங்கள் கழித்து முயல்வது நல்லது” என்று கூறியுள்ளார்.

மற்றொரு மருத்துவர் கூறுகையில், “தடுப்பூசியின் பலன்கள், பாதிப்புகள் பற்றி தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது. இது தொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகிறது. எனவே, அதுவரை கர்ப்பிணிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார்.

ஃபைசர், மடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகளை கர்ப்பிணிகளுக்குச் செலுத்தி வெளிநாடுகள் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், தாய்க்கு செலுத்தப்படும் தடுப்பூசி காரணமாக தாயிடமிருந்து சிசுவுக்கு ஆன்டி பாடி எனப்படும் கொரோனா கிருமி பற்றிய விவரம் கடத்தப்படுவதாக சில தகவல் வெளியாகி உள்ளது. இது எல்லாம் வெறும் ஆராய்ச்சி அளவிலேயே உள்ளது.

இதற்கிடையே இந்திய அரசின் சுகாதாரத் துறை தரப்பிலும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் இரண்டுமே இறந்த வைரஸ் கிருமியைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. எனவே, இதை எடுத்துக்கொள்வதில் பிரச்னை இருக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நோய் புதுசு, தடுப்பூசியும் புதுசு… பெரியவர்கள் மத்தியில் சில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக சில தகவல்கள் அவ்வப்போது வருகின்றன. அவற்றை உறுதி செய்யவும் முடியவில்லை. எனவே, இந்த சூழலில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை எடுக்காமல் இருப்பதே நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.