ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து… முதல்வர் நாராயணசாமி உறுதி

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து… முதல்வர் நாராயணசாமி உறுதி

ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதியாக தெரிவித்தார்.

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுதேர்வு எனப்படும் நீட் தேர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், நேற்று நாடு முழுவதும் திட்டமிட்டப்படி தேர்வு நடைபெற்றது. புதுச்சேரியிலும் நீட் தேர்வு நடந்து முடிந்தது. புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி நீட் தேர்வு நடைபெறும் அங்குள்ள ஒரு கல்லூரிக்கு சென்று பார்வையிட்டார்.

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து… முதல்வர் நாராயணசாமி உறுதி
புதுசசேரி முதல்வர் வி. நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி நேற்று நீட் தேர்வு நடைபெற்ற மூலகுளம் கிறிஸ்ட் தனியார் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் ராகுல் காந்தி தலைமையிலா காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமைந்தால் நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தெரிவித்தார்.

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து… முதல்வர் நாராயணசாமி உறுதி
நீட தேர்வு நடைபெற்ற மையம்

மேலும் முதல்வர் நாராயணசாமி டிவிட்டரில், தனிப்பட்ட முறையில் பரீட்சை மையத்தில் எங்கள் புதுச்சேரி நீட் ஆர்வலர்களின் மாணவர்களையும் பெற்றோர்களையும் தனிப்பட்ட முறையில் பார்வையிட்டேன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவு செய்து இருந்தார். நீட் தேர்வு முதலில் மே 3ம் தேதியன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. முதலில் ஜூலை 26ம் தேதி அதன் பிறகு செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.