கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 4.2 லட்சம் பேர்… அபராதம் வாயிலாக ரூ.15 கோடி திரட்டிய உத்தரகாண்ட் அரசு

கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 4.2 லட்சம் பேர்… அபராதம் வாயிலாக ரூ.15 கோடி திரட்டிய உத்தரகாண்ட் அரசு

உத்ரகாண்டில் லாக்டவுன் தொடங்கியது முதல் கோவிட்-19 விதிமுறைகளை மீறியதாக 4.2 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநில அரசுக்கு சுமார் ரூ.15 கோடி கிடைத்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் இறுதியில் நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. முதல் கட்ட லாக்டவுன் காலத்தில் மக்கள் வீட்டை வெளியே வர தடை விதிக்கப்பட்டது. பின் லாக்டவுன் சிறிது தளர்த்தியபோது, பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவது கட்டாயம், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. இந்த கோவிட்-19 விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு மாநில அரசுகள் அபராதம் விதித்தன.

கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 4.2 லட்சம் பேர்… அபராதம் வாயிலாக ரூ.15 கோடி திரட்டிய உத்தரகாண்ட் அரசு
அபராதம் செலுத்தும் நபர்

உத்ரகாண்டில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பா.ஜ.க. அரசும் கோவிட்-19 விதிமுறைகளை கடுமையாக செயல்படுத்தியது. கோவிட்-19 விதிமுறைகளுக்கு இணங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் அம்மாநில அரசுக்கு ரூ.15 கோடி கிடைத்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில டி.ஜி.பி. அசோக் குமார் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 4.2 லட்சம் பேர்… அபராதம் வாயிலாக ரூ.15 கோடி திரட்டிய உத்தரகாண்ட் அரசு
சமூக இடைவெளி

கோவிட்-19 விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என இதுவரை 4.22 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.15 கோடி வசூலாகியுள்ளது. 3.03 லட்சம் பேரிடம் மாஸ்க் அணியவில்லை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என 49,852 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.