உத்தரகாண்ட் : சுரங்கப்பாதையில் சிக்கிய 26 உடல்கள் மீட்பு

 

உத்தரகாண்ட் : சுரங்கப்பாதையில் சிக்கிய 26 உடல்கள் மீட்பு

உத்தரகாண்ட் தபோவன் சுரங்கப்பாதையில் இருந்து இதுவரை 26 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் : சுரங்கப்பாதையில் சிக்கிய 26 உடல்கள் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கடுமையான மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, அம்மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பனிப்பாறைகள் உடைந்து மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. மேலும் ஜொஷிமத் பகுதியில் பனிப்பாறை உருகியதால், தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

இந்த சூழலில் வெள்ளப்பெருக்கின்போது சுரங்கப்பாதைகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பலர் பாதிப்படைந்துள்ளனர். இரவு 8 மணி நிலவரப்படி, தபோவன் சுரங்கப்பாதையில் இருந்து இதுவரை 26 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், பெரு வெள்ளம் காரணமாக 171 பேர் மாயமாகி உள்ளதாகவும் அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்பு பணிகள் இடைவிடாமல் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.