200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திய அமெரிக்கா.. உத்தரகாண்ட் பா.ஜ..க முதல்வரின் உளறல்

 

200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திய அமெரிக்கா.. உத்தரகாண்ட் பா.ஜ..க முதல்வரின் உளறல்

200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திய இங்கிலாந்து என்று சொல்வதற்கு பதில் அமெரிக்கா என்று உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் ராவத் கூறியது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

உத்தரகாண்டில் முதல்வர் திராத் சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. நைனிடாலின் ராம்நகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் திராத் சிங் ராவத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 20 குழந்தைகள் பெற்று இருந்தால் கூடுதலாக ரேஷன் (அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள்) கிடைத்து இருக்கும், இந்தியாவை 200 ஆண்டுகளாக அடிமைபடுத்தியது அமெரிக்கா என்று சர்ச்சை கிளப்பும் வகையில் பேசியது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திய அமெரிக்கா.. உத்தரகாண்ட் பா.ஜ..க முதல்வரின் உளறல்
அமெரிக்கா


அந்த நிகழ்ச்சியில் முதல்வர் திராத் சிங் ராவத் பேசுகையில் கூறியதாவது: தொற்றுநோய் பரவல் காலத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு உறுப்பினருக்கு 5 கிலோ ரேஷன் வழங்கப்பட்டது. 10 குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு 50 கிலோவும், அதேவேளையில் 20 குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு 1 குவிண்டால் (100 கிலோ) ரேஷன் வழங்கப்பட்டது. 2 குழந்தைகள் உடையவர்களுக்கு 10 கிலோ ரேஷன் கிடைத்தது. மக்கள் கடைகளை கட்டினர் மற்றும் வாங்குபவர்களை கண்டுபிடித்தனர். அவர் ஒரு போதும் இது போன்ற நல்ல அரிசியை சாப்பிடவில்லை. இதற்கு யார் காரணம்? இப்போது நீங்கள் அதை பார்த்து பொறாமைப்படுகிறீர்கள். நேரம் இருந்த போது, நீ்ங்கள் 2 மட்டுமே (குழந்தைகள் பிறப்பு) தயாரித்தீர்கள். நீங்கள் ஏன் 20ஐ (குழந்தைகள்) உற்பத்தி செய்யவில்லை.

200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திய அமெரிக்கா.. உத்தரகாண்ட் பா.ஜ..க முதல்வரின் உளறல்
காங்கிரஸ்

அமெரிக்கா நம்மை 200 ஆண்டுகளாக அடிமைகளாக வைத்திருந்தது, உலகம் முழுவதும் ஆட்சி செய்தது. சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காத பேரரசு. இன்று (தொற்று நோயால்) போராடி வருகிறது. மறுபுறம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை காரணமாக, 130-135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இன்னும் நிம்மதியை உணருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முதல்வர் திராத் சிங் பேச்சை குறிப்பிட்டு காங்கிரஸ் பிரதமர் மோடியை கிண்டல் அடித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி இதுபோன்ற கற்றறிந்த திறமைகளை தேர்ந்தேடுத்துள்ளார் என்று கிண்டல் செய்தார். அண்மையில்தான் திராத் சிங் ராவத்தை முதல்வராக பா.ஜ.க. தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.