இந்த ஆண்டு துர்கா பூஜை கொண்டாடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை… யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு

இந்த ஆண்டு துர்கா பூஜை கொண்டாடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை… யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, உத்தர பிரதேசத்தில் இந்த ஆண்டு துர்கா பூஜை கொண்டாடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

வடமாநிலங்களில் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு துர்கா பூஜை எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கு இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில், உத்தர பிரதேசத்தில் துர்கா பூஜை கொண்டாடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கும் முடிவை யோகி ஆதித்யநாத் அரசு தைரியமாக எடுத்துள்ளது.

இந்த ஆண்டு துர்கா பூஜை கொண்டாடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை… யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு
துர்கா பந்தல்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக கூறியதாவது: கோவிட்-19 தொற்றுநோயை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் இந்த ஆண்டு துர்கா பூஜை கொண்டாடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. தெருக்களில் அல்லது பந்தல்களில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. மக்கள் தங்களது வீடுகளில் சிலைகளை வைத்து கொள்ளவேண்டும்.

இந்த ஆண்டு துர்கா பூஜை கொண்டாடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை… யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு
ராம் லீலா

ஊர்வலங்களுக்கு அனுமதி கிடையாது, கண்காட்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யக்கூடாது. அதேசமயம் கோவிட்-19ஆல் ராம்லீலா நடத்தும் பாரம்பரியம் உடைக்கப்படாது. இருப்பினும் ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே ராம்லீலாவை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். கோவிட்-19 பரவுவதை தடுக்க, ராம்லீலா குழுக்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சுத்திகரிப்பு, மாஸ்க் அணிவது மற்றும் கை கழுவுதல் போன்றவற்றை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.