உத்தர பிரதேசத்தில் முதல்வரை தொடர்ந்து துணை முதல்வருக்கும் கொரோனா

 

உத்தர பிரதேசத்தில் முதல்வரை தொடர்ந்து துணை முதல்வருக்கும் கொரோனா

உத்தர பிரதேசத்தில் துணை முதல்வர் தினேஷ் சர்மா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உத்தர பிரதேசத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது.

உத்தர பிரதேசத்தில் முதல்வரை தொடர்ந்து துணை முதல்வருக்கும் கொரோனா
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடந்த 14ம் தேதியன்று கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தற்போது வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மேலும், ஆன்லைன் வாயிலாக அனைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் அம்மாநில அரசின் செயல்பாடுகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வழக்கம் போல் நடந்து கொண்டு இருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் முதல்வரை தொடர்ந்து துணை முதல்வருக்கும் கொரோனா
கொரோன பரிசோதனை

இந்த சூழ்நிலையில் உத்தர பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மாவுக்கும் அவரது மனைவி கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தினேஷ் சர்மா இது தொடர்பாக டிவிட்டரில், எனக்கும், எனது மனைவிக்கும் பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி, நாங்கள் வீட்டில் தனிமைப்படுத்துதலில் உள்ளோம். கடந்த சில நாட்களாக என்னிடம் தொடர்பு கொண்ட நபர்கள் தாங்களாகவே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துக்கொள்ளும்படி மற்றும் கோவிட்-19 வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றும்படி வலியுறுத்துகிறேன் என பதிவு செய்துள்ளார்.