சோன்பத்ரா படுகொலை சம்பவ இடத்துக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவரை தடுத்து நிறுத்திய உ.பி. போலீசார்

சோன்பத்ரா படுகொலை சம்பவ இடத்துக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவரை தடுத்து நிறுத்திய உ.பி. போலீசார்

உத்தர பிரதேசம் மாநிலம் சோன்பத்ரா அருகே உள்ள உம்பா என்ற கிராமத்தில் கடந்த ஆண்டு ஜூலை 17ம் தேதியன்று, 36 ஏக்கர் நிலத்துக்காக குஜார் மற்றும் கூண்ட் பழங்குடியின மக்களிடையே பெரிய அளவில் வன்முறை வெடித்தது. நிலத்தில் இருந்து பழங்குடியின விவசாய மக்கள் வெளியே மறுத்ததால் அந்த கிராமத்தின் தலைவர் யோகா தத் தலைமையில், 32 டிராக்டர்களில் 200 பேர் கொண்ட கும்பல் அங்கு சென்று கொடூரமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

சோன்பத்ரா படுகொலை சம்பவ இடத்துக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவரை தடுத்து நிறுத்திய உ.பி. போலீசார்

இந்த படுகொலை சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடக்கும் குற்றங்களை நாட்டுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. சோன்பத்ரா படுகொலை சம்பவத்தில் உயிர்இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசுவதற்காக நேற்று உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் சோன்பத்ராவுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதி போலீசார் அவர்களை பாதி வழியில் தடுத்து கெஸ்ட் ஹவுசில் தங்க வைத்தனர். அஜய் குமார் லாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சோன்பத்ரா படுகொலை சம்பவ இடத்துக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவரை தடுத்து நிறுத்திய உ.பி. போலீசார்

தங்களின் உரிமைக்காக போராடியதால் கொல்லப்பட்ட மக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த போகிறேன். இந்த அரசாங்கம் அடக்கு முறையை நம்புகிறது. அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. என்னை தடுத்து நிறுத்த பயன்படுத்தும் படையை மாநிலங்களில் குற்றங்களை தடுக்க மற்றும் குற்றவாளிகளை பிடிக்க பயன்படுத்தப்பட்டு இருந்தால், அது மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்திருக்கும். இருப்பினும், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்து சிறைக்கு அனுப்புவதில் மாநில அரசு மும்முரமாக உள்ளது. இருப்பினும், காங்கிரஸ் கட்சி அடங்காது. எங்களது பழங்குடி சகோதர சகோதரிகளின் குரலை நாங்கள் தொடர்ந்து எழுப்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.